உயிரைக் குடித்தவனே

|












பூவொன்று நீயென்று 
கூவிப் பூக்க
என்னுள்ளே வாவென்று
தாவித் தாக்க
சொல்லாமல் பொல்லாத; காதல்
செய்யும் ஒரு தொல்லை

என்னோடு இன்றுடன்
இரவு இல்லை
மூடாத கண்ணோடு 
கனவின் வில்லை
சொல்லாமல் ஏங்கிடும்; மனதும்
செய்யும் ஒரு லீலை

புல்லினில் வெண்பனி
புதைந்து தூங்கும்
வெய்யிலின் வேட்கையில்
கலக்க ஏங்கும்
கண்ணினில் உன் முகம்
காணும் என் நாட்களே

மொட்டவிள் பூவினில் 
வண்டு ஆனாய்
மொத்தமும் என் மனம்
உண்டு போனாய்
சுற்றிலும் உன் முகம்
சுழலுது என் கண்ணிலே

பூவினைக் காம்பினில்
வாசம் பார்த்தாய்
பட்டென என்னுயிர் 
பதறச் செய்தாய்
சொக்கிய நேரத்தில்
சொப்பனம் நெஞ்சிலே....!